நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பக்தி படம்
4/21/2022 5:35:47 PM
நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் படங்களை இயக்கிய சார்லஸ் இயக்கும் படம் நாகா. இதில் பிந்து மாதவி, ரைய்சா வில்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி சார்லஸ் கூறியதாவது: நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து சங்காரம் செய்து அழித்து ஒழிப்பதே “நாகா” படத்தின் ஒன்லைன். இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார்.
மேலும், கருணாகரன், அறிமுகம் விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். வருகிற 27ம் தேதி முதல் புதுச்சேரியில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து, ஹம்பி, கேரளா கடற்கரையோரம் என தொடர்ந்து 55 நாட்கள் படபிடிப்பு நடை பெறுகிறது. என்றார்.