கனடாவில் தாய் அழுததால் பதறிய பிள்ளைகள்! கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததே அழுகைக்கு காரணம்


கனடாவில் பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு போன் செய்து அழுததால் அவர்கள் பதறிய நிலையில் அது தாங்க முடியாத மகிழ்ச்சியில் வந்த அழுகை என தெரியவந்துள்ளது.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் Pearl Thomas. இவர் தான் வாங்கிய லொட்டோ மேக்ஸ் டிக்கெட்டுக்கு $10,000 பரிசு விழுந்ததாக நினைத்தார்.
பின்னர் மீண்டும் சரி பார்த்த போது தான் ஒரு பூஜ்ஜியத்தை எண்ணாமல் தவறவிட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: கனடாவில் பேஸ்புக்கில் பழக்கமான நபர் சொன்ன வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த நிலை!

ஏனெனில் Pearl-க்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்திருந்தது.
இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற Pearl தனது குழந்தைகளிடம் சென்று அழுதிருக்கிறார், இதையடுத்து ஏதோ தப்பான விடயம் நடந்துவிட்டதால் அவர் அழுகிறார் என நினைத்து பதறினார்கள்.

பின்னர் தான் லொட்டரியில் பரிசு விழுந்ததை கூறி பிள்ளைகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த லொட்டரி பரிசு தன் வாழ்க்கையை மற்றும் என கூறிய Pearl பரிசு பணத்தை வைத்து என்ன செய்யபோகிறேன் என்பது குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.