வாகன எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள், மும்பை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில் வாகனங்களின் வாடகைக் கட்டணத்தை 10% முதல் 14% வரை உயர்த்தியுள்ளன. நகரத்தில் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
ஊபர் இந்தியா நிறுவனத்தின் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளின் தலைவர் நிதிஷ் பூஷன் கூறுகையில், “ஊபர் நிறுவனம் ஓட்டுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, தற்போதைய எரிபொருள் விலை உயர்வு கவலையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டது. “இந்த எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து மீள ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக, சென்னையில் கட்டணத்தை 10% உயர்த்தியுள்ளோம். வரும் வாரங்களில், விலை உயர்வு நகர்வைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
அதே போல, ஓலா நிறுவனம் மினி (ஹேட்ச்பேக்) மற்றும் பிரைம் (செடான்) கார்களில் பயணிக்க 1 கி.மீ-க்கு ரூ.17 முதல் ரூ.20.5 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஓட்டுநர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் தெரியவந்துள்ளது. ஓலா நிறுவனம் இதற்கு முன், மினி (ஹேட்ச்பேக்) மற்றும் பிரைம் (செடான்) கார்களில் பயணிக்க கட்டணம் ரூ.15 மற்றும் ரூ.18 ஆக இருந்தது.
கட்டண உயர்வு இருந்தாலும், சென்னையில் உள்ள டாக்ஸி வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பெரிய அளவில் வாகனப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் பல வாகனங்களின் ஒட்டுநர்கள் இந்த செயலிகளில் இருந்து வெளியேறி, கோடை விடுமுறைக்கு ஊட்டி அல்லது கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதனால், சென்னையில் பீக் ஹவர்ஸின் போது நகரத்திற்குள் குறுகிய பயணங்களுக்கான தேவையும் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
டாக்ஸி வாகனங்களை பயன்படுத்தும் சென்னையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “காலையில் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்து ரூ.1,000 செலுத்த வேண்டிய வாடகை வண்டி கிடைத்தது. செலுத்திய போதிலும், ஏசியை இயக்க டிரைவர் மறுத்துவிட்டார். பல ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் காரில் ஏசி போட மறுக்கிறார்கள். ஏனெனில், ஏசி போட்டால் எரிபொருள் அதிகமாக செலவாகும்.” என்று கூறுகிறார்கள் என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது குறித்து மற்றொரு பயணி கூறுகையில், “ஒருதலைப்பட்சமாக கட்டணத்தை உயர்த்துவதற்கு பதிலாக, தற்போது இந்த நிறுவனங்கள் முக்கிய பொது போக்குவரத்துக்கான விருப்பமாக இருப்பதால், பயணிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
இந்த கட்டண உயர்வு குறித்து சிஐடியு ஆட்டோரிக்ஷா பிரிவு மாநிலத் தலைவர் எஸ் பாலசுப்ரமணியம் ஆங்கிலம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கட்டணம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73 ஆக இருந்தபோது வசூலிக்கப்பட்டது. தற்போது டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க மாநில அரசு தவறிவிட்டது. தற்போதைய எரிபொருள் விலை நிலவரப்படி. இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதை தடுக்கும் வகையில், மொபைல் ஆப் தயாரிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது, 30 சதவீதம் கமிஷன் கிடைக்கிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“