காலத்திற்கு உதவாத 1500 சட்டங்களை நீக்கி இருக்கிறேன் – பிரதமர் மோடி.!

நான் பிரதமராக பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளில் காலத்திற்கு உதவாத 1,500 சட்டங்களை நீக்கி இருக்கிறேன் என்று, 15-வது குடிமுறை அரசுப்பணி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி அரசு அதிகாரிகளின் மத்தியில் பேசினார்.

மேலும் அவரின் அந்த உரையில், “ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் தான் நம் நாட்டின் முதன்மையானதாக கருத வேண்டும். எந்த முடிவை எடுத்தாலும், அது நமது ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துமா என்று நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும்.

நாம் என்ன செய்தாலும் அது உள்ளூர் அளவிலும், கிராம அளவில் பயன்தரும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். தேசம் தான் முதலில் என்று நம் பணிகளை செய்யவேண்டும். காலத்திற்கு ஏற்ப நமது சமூக மனநிலையும் மாற்றிக்கொள்ளவேண்டும். 

இறந்தவர்களின் உடலை கங்கைக்கரையில், சந்தன கட்டையில் எரியூட்டுவதையே இந்துக்கள் விரும்பினர். ஆனால், இப்போது மின் தகன முறையை இந்துக்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டனர். காலத்திற்கு ஏற்ப சட்டங்களும் மாற வேண்டும். 


 
இந்தியாவில் பல நூறு சட்டங்கள் மக்களுக்கு சுமையாக இருந்தது. நான் பிரதமராக பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளில் காலத்திற்கு உதவாத 1,500 சட்டங்களை நீக்கி இருக்கிறேன். இந்த 8 வருடங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அனைத்தும். இந்தியர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன” என்று பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.