இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இல்லாத காரணத்தால் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலைக்கு ரஷ்யாவும் ஒரு காரணம் என்பது தான் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?
மின் உற்பத்தி
இந்தியாவில் இருக்கும் பல மின் உற்பத்தி நிலையில் போதிய நிலக்கரி இல்லாத காரணத்தால், உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது உள்ளது. செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாட்டில் நிலக்கரி மற்றும் எரிவாயு வாங்க முடியாத காரணத்தால் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதால் பாகிஸ்தான் மக்கள் இருட்டில் வாழ வேண்டிய நிலை உருவானது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் போலவே தற்போது இந்தியாவிலும் நிலக்கரி இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இந்தியா அதிகப்படியான நிலக்கரியை உள்நாட்டு உற்பத்தி செய்தாலும் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா போர்
இந்நிலையில் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி தேவையைச் சரியாகக் கணிக்காமல் குறைந்த அளவில் உற்பத்தி செய்த காரணத்தால் நிலக்கரி தட்டுப்பாடு உருவாகியுள்ளது. ஆனால் இதேவேளையில் இந்தியாவின் இறக்குமதி நிலக்கரிக்கு உக்ரைன் மீது ரஷ்யா-வின் போர் தொடுத்த காரணத்தால் ஏற்பட்ட சப்ளை செயின் பாதிப்பு இந்தியாவைப் பாதித்துள்ளது.
இறக்குமதி நிலக்கரி
இந்தியாவின் மொத்த நிலக்கரி பயன்பாட்டில் 12 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி அடிப்படையிலான நிலக்கரி தான். ரஷ்யா-உக்ரைன் போர் சர்வதேச நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை இறக்குமதி நிலக்கரி விலையைத் தாறுமாறாக உயர்ந்து சரியான நேரத்தில் பெற முடியாமல் போனது.
இயற்கை எரிவாயு
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் இயற்கை எரிவாயும் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் இதையும் பாதித்துள்ளது. 2021 நிதியாண்டில், இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தியின் பங்கு 4 சதவிகிதமாகும். 2022ஆம் நிதியாண்டில் இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தியின் பங்கு 50 சதவீதம் குறைந்து வெறும் 2 சதவீதமாக உள்ளது.
How russia – Ukraine war affected india’s electricity generation
How russia – Ukraine war affected india’s electricity generation இந்தியாவின் நிலைக்கு ரஷ்யா காரணமா..? கோடை வெயிலில் கரன்ட் கட்..!