இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தடைசெய்யப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை முகாமையாளர் எஸ்.பிரசாந்த் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான ரீ.சஞ்சீவன், கே.தர்மேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
செயலமர்வில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 100 பேர் பங்குபற்றினர்.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பிரமிட் வகையான தடைசெய்யப்பட்டவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.