புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று நமது நாடு நமது குருக்களின் கொள்கைகளில் முழு ஈடுபாட்டுடன் முன்னேறி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், பத்து குருக்களின் பாதங்களில் வணங்குகிறேன். பிரகாஷ் பர்வ் விழாவில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனைக்கு முன்னால் குரு தேக் பகதூர் ‘ஹிந்த் தி சதர்’ ஆகி பாறையாக நின்றார். ஔரங்கசீப் பல தலைகளை துண்டித்தாலும் நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி.
இந்தியா எந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும் நாம் முழு உலகத்தின் நலனைப் பற்றி சிந்திக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…பஞ்சாப்பில் முகக்கவசம் கட்டாயம்- அரசு உத்தரவு