ஒருவரது உடல் சூடு அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் கால நிலை மட்டுமின்றி, உணவுகளான காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.
உடல் சூடு ஏற்பட்டு விட்டால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கிவிடும். எனவே இவற்றில் இருந்து விடுபடுவது நல்லது.
தற்போது உடல் சூட்டை குறைக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
- வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும். இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும்.
- சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும்.
- தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும்.
- 2 ஸ்பூன் வெந்தயத்தை முன்னாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம்.
- புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். சந்தன கட்டை சிறிதளவு கிடைத்தால், அதைத் தினமும் இழைத்து முகத்தில் உடலில் பூசி குளித்தால் உடல் சூட்டை நீக்கும்.
- கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது.