வழக்கமான தோல் பராமரிப்பு மற்றும் சுத்தமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது சருமத்தையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், நமது தோல் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக்கொள்ள இயற்கையான வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
உங்கள் கிச்சனில் எப்போதும் உள்ள மஞ்சள் மட்டும் கொண்டு இவை இரண்டையும் நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். நமது தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மஞ்சள், தோல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
மஞ்சள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, இதைப் பயன்படுத்த சிறந்த இரண்டு வழிகள் இவை!”
மஞ்சள் ஃபேஸ் பேக்
*மஞ்சள்
* தேன்
* பால்
*கடலை மாவு
அனைத்தையும் கலந்து நன்கு பேஸ்ட் செய்யவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பளபளப்பான மற்றும் தெளிவான சருமம் கிடைக்கும்.
மஞ்சள் பால்
மஞ்சள் பால்’ புற்றுநோய்க்கு எதிரான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நீங்கள் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் செய்ய வேண்டியது இங்கே.
* ¼ தேக்கரண்டி இலவங்கப்பட்டை
* ¼ தேக்கரண்டி இஞ்சி
* ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் (விரும்பினால்)
* ½ தேக்கரண்டி தேன்
* 1 கிளாஸ் பால்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பாலை சேர்த்து கேஸ் அடுப்பில் வைக்கவும்.
பாலில் மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
தொடர்ந்து கிளறவும்.
பாலில் இஞ்சி, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தேன் சேர்க்கவும்.
சிறிது நேரம் கொதிக்க வைக்கவும், உங்கள் மஞ்சள் பால் தயார்!
பளபளப்பான சருமம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை கண்டிப்பா டிரை பண்ணுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“