புதுச்சேரி,-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் புதுச்சேரிக்கு நாளை வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை துறையின் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் நாளை 23ம் தேதி வருகை தருகின்றனர்.இருவரும், நாளை காலை 9.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் காதர் உசைன், நுரையீரல், மூச்சுகுழாய், ரோபோடிக் உதவி தொராசிக் அறுவை சிகிச்சை, நெஞ்சு சுவர் கட்டி அகற்றம், எண்டோ மூச்சுக்குழாய், எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்சன், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், முதுகுவலி, உடல்சோர்வு, கால்வலி, அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்முன் பதிவிற்கு 96771-33345,72990-62029 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement