உக்ரைனில் தற்போதைய பொருளாதரா நெருக்கடியை எதிர்கொள்ள மாதம் 7 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள உக்ரைன் கடுமையாக போராடி வருவதாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. இந்த நிலையில் மீண்டும் பொருளாதார உதவிகளை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி,
உக்ரைனில் பொருளாதாரத்திற்கு உதவும் அனைத்து பொருட்களையும் அழிப்பதை ரஷ்ய இராணுவம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், ரயில் நிலையங்கள், உணவுக் கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை அதில் அடங்கும் எனவும், தற்போதைய சூழலில் மாதம் 7 பில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உக்ரைன் நிர்வாகம் தொடர்ந்து சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் 500 மில்லியன் டொலர் தொகையை அறிவித்துள்ளார் அமெரிக்காவின் கருவூல செயலாளர் Janet Yellen.
மேலும், உக்ரைனின் மிக முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொகை உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே என தெரிவித்துள்ள Janet Yellen உக்ரைனின் மறு கட்டமைப்புக்கு நட்பு நாடுகள், சர்வதேச கூட்டமைப்புகளின் உதவியுடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பா மிட்டெடுக்கப்பட்டது போன்று, உக்ரைன் நாடும் மீண்டுவரும் என்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.