உக்ரைன் நகரில் புடினின் படுகொலைகளை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்


உக்ரைனில் இருந்து மரியுபோல் நகரம் விடுவிக்கப்பட்டதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளின் கொடூரங்கள் செயற்கைக்கோள் படங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
சுமார் 2,000 வீரர்களும் பல நூறு அப்பாவி பொதுமக்களும் மட்டுமே தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் முன்னெடுத்த படுகொலைகள், கொடூரங்களை தனியார் நிறுவனம் ஒன்று செயற்கைக்கோள் படங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த புகைப்படங்கள் அனைத்தும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மரியுபோல் நகரின் மத்தில் இருந்து 12 மைல்கள் தொலைவில் புதிதாக 200 கல்லறைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 400,000 மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரம் 8 வார கால தொடர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதில் அப்பாவி மக்கள் 10,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 90% உள்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 40% உள்கட்டமைப்புகள் மறுசீரமைக்க முடியாதவகையில் சேதமடைந்துள்ளதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு முக்கிய தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சர்வதேச நீதிமன்றம் விசாரணை முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே, Azovstal இரும்பு தொழிற்சாலையில் சிக்கியுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின்,
அங்கிருந்து எவரும் வெளியாறவோ, உள்ளே செல்லவோ முடியாதபடி மொத்தமாக மூடிவிட கட்டளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எஞ்சியுள்ள இராணுவத்தினர் ரஷ்யாவிடம் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்களை வெளியேற விடாமல் தடுத்து, மரணத்திற்கு தள்ளுவதே விளாடிமிர் புடினின் நோக்கம் என கூறப்படுகிறது.

ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி மக்களை Azovstal தொழிற்சாலையில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என நகர மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.