சீனாவுடனான எல்லையில் முரண்பாட்டை குறைப்பதற்கான வழி எல்லையில் படைகளைக் குறைப்பதுதான் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள் வரை இந்தியாவும் சீனாவும் படைகளைக் குவித்து வைத்துள்ளன.
மூன்று சுற்றுப் பேச்சுகளையடுத்து அசல் எல்லைக்கோடு பகுதியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் இருதரப்பிலும் படைகள் முழுமையாகப் பின்வாங்கவில்லை.
இந்தியப் படைகள் களத்தில் உறுதியுடன் நின்ற போதும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.