நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தமிழ் சினிமாவில் தற்போது வரை மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன்.
90 ஸ் கிட்ஸ்களின் மிகவும் பேவரைட் நடிகர்களில் இவரும் ஒருவர்.1981 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் இன்று வரை சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்ட உள்ளார்.நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. ஏழுமலை, ஜெய் ஹிந்த், கர்ணா,
வாத்தியார்
போன்ற பல்வேறு வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் அர்ஜுன்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவருக்கு ஐஸ்வர்யா,
அஞ்சனா
என இரண்டு மகள்கள் உள்ளனர். அர்ஜுனின் மூத்த மகள்
ஐஸ்வர்யா
அர்ஜுன் 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களைப் பெற்றது.அர்ஜுனுக்கு இரண்டாவதாக அஞ்சனா என்ற மகள் இருக்கிறார். இவர் பற்றி அதிகம் செய்திகள் வெளியானதில்லை. சினிமாவிலும் நுழைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் குடும்பத்தினர் அஞ்சனாவின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!