ஐபிஎல்-யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த CSK அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது அந்த அணிக்கு தொடர்ச்சியாக 7வது தோல்வியாகும்.
இந்த போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா, தங்கள் அணி வீரர்கள் கடுமையாக போராடியதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், ‘இறுதி வரை நாங்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினோம்.
ஆனால் தோனி எந்த நெருக்கடியிலும் எப்படி விளையாடுவார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர் தனது துடுப்பாட்டத்தில் மூலம் CSK அணிக்கு வெற்றியை பெற்று தந்துவிட்டார்.
மும்பையின் தோல்விக்கு இது தான் காரணம் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம்.
ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்ததால், பிறகு துடுப்பாட்டத்தில் ரன் குவிப்பது கடினம் ஆகிவிட்டது.
ஆனால் அதன் பிறகு விளையாடிய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கௌரவமான இலக்கை CSK அணிக்கு நிர்ணயித்தனர்.
அதனை வைத்து அவர்களுக்கு நெருக்கடி தர முயற்சித்தோம். இன்னும் ஒரு 20 ஓட்டங்கள் கூட அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம்’ என தெரிவித்தார்.