திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு முறை எழுதச் சொல்லி அம்மாவட்ட எஸ்.பி நூதன தண்டனை வழங்கினார்.
பழனி பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு எஸ்.பி சீனிவாசன் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து, திருக்குறள்களை எழுதச் சொல்லியும் இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதச் சொல்லியும் நூதன தண்டனை வழங்கினார்.