வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் வெவ்வேறு கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும், அதுவே அவரது தொழில் எனவும் பா.ஜ., எம்.பி திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், கட்சியை பலப்படுத்தும் விதமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்., கட்சியில் சேரப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்., தலைவர் சோனியா தலைமையில் அக்கட்சி மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து விவாதித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசாந்த் கிஷோர் காங்.,கில் சேர்வது தொடர்பாக மேற்குவங்க பா.ஜ., எம்.பி திலீப் கோஷ் கூறியதாவது: பிரசாந்த் கிஷோர் திரிணமுல் காங்., கட்சியிலும் இணைந்துள்ளார். அதேபோல், நிதிஷ்குமாரின் கட்சியிலும் இருந்தார். வெவ்வேறு கட்சிகளில் சேருவதே அவரது தொழில். அவர் எந்தெந்த கட்சிக்காக எல்லாம் வேலை பார்க்கிறாரோ அந்தந்த கட்சிகளின் உறுப்பினர் அட்டையை பெற்றுவிடுவார். அந்த உறுப்பினர் அட்டையை ஒவ்வொரு கட்சியினரிடமும் காண்பித்து, நான் உங்கள் கட்சி, எனக்கு உத்தரவிடுங்கள் என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement