ரஷ்யா உடனான நேரடி ராணுவ மோதலை நேட்டோ தவிர்க்க வேண்டும் என ரஷ்ய சான்சலர் எச்சரித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோட்ஸ்-யிடம், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவதில் ஜேர்மனி தோல்வியடைந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஓலாஃப், உக்ரைன் போரில் ஜேர்மனி எப்போது ஒரு அங்கமாக கருத வேண்டும் என்று எந்த விதி புத்தகத்திலும் குறிப்பிடவில்லை.
அதனால்தான் நாம் ஒவ்வொரு நடவடிக்கைகையும் மிகவும் கவனமாகக் கருத்தில் கொள்வதும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒருங்கிணைப்பதும் மிக முக்கியமானது.
உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானம்… உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ராணுவம் தகவல்
நேட்டோ உடனான மோதலை தவிர்ப்பதே எனக்கு முதன்மையானதாகும்.
மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலை நேட்டோ தவிர்க்க வேண்டும்.
அதனால்தான் நான் கருத்துக் கணிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை அல்லது விமர்சனங்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு தவறின் விளைவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும் என ஓலாஃப் ஷோட்ஸ் கூறினார்.