ஜீவா
மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய திரைப் பயணத்தில், ராம், கற்றது தமிழ், ஈ போன்ற சீரியஸான பரிணாமத்திலான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை கவனிக்க வைத்தவர் ஜீவா.
அதே நேரத்தில் கலகலப்பான சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது அவர்
சுந்தர் சி
இயக்கத்தில் ஜெய்யுடன் பெயரிடப்படாத படம், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதற்கிடையில்
கோல்மால்
படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.
‘டான்’ படத்தின் தாறுமாறு அப்டேட்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமானரசிகர்கள் இருந்தனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் தற்போது ஜீவா மற்றும்
பிரியா பவானி சங்கர்
முதல் முறையாக புதிய படத்திற்காக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை
எஸ் ஆர் பிரபு
தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?