சென்னை மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல செயற்பொறியாளர்கள் 200 வார்டுகளில் உள்ள அனைத்து கட்டுமான பணியிடங்களையும் பார்வையிட்டு, அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டத்தை மீறி கட்டப்படும் கட்டுமானப் பணிகளைத் தடுக்க அஸ்திவார பணிகள் அளவிலேயே களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று நகர்ப்புற திட்டமிடல் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல செயற்பொறியாளர்கள் 200 வார்டுகளில் உள்ள அனைத்து கட்டுமான பணியிடங்களையும் பார்வையிட்டு, அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனுமதியளிக்கப்பட்ட கட்டிட கட்டுமானங்கள் விதி மீறலைத் தடுக்க, பெருநகர சென்னை மாநகராட்சிப் பொறியாளர்கள் கட்டப்படும் கட்டிடங்ளை அஸ்திவாரம் அளவில் இருந்தே அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல செயற்பொறியாளர்களும் கட்டுமான இடங்களை பார்வையிட்டு, அனுமதியில்லாத கட்டுமானங்கள் மற்றும் விதி மீறல்களைக் கண்டறிந்து, தமிழ்நாடு நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம், 1971-இன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை நகரில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மற்றும் விதி மீறல் கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையுடன் அஸ்திவார பணிகள் கட்டுமான நிலையில் இருந்து ஆய்வு அறிக்கையை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அஸ்திவாரம் மட்டத்தில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படாத கட்டிடத்தில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் அல்லது இளநிலைப் பொறியாளர் மீது ஒழுங்கு 0நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட கட்டிடத்தின் திட்டத்தில் இருந்து விலகி விதி மீறல் நடப்பதைத் தடுக்க, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கட்டட அஸ்திவாரம் மட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை நகர்ப்புற திட்டமிடுபவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி அஸ்திவார மட்டத்தில் கட்டுமானம் நடந்திருந்தால், மேற்கொண்டு எப்படிச் செய்வது என்பது குறித்து கட்டிட உரிமையாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு அறிவுறுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் இருந்து விலகி விதிமீறல் ஏற்பட்டால், பொறியாளர்கள் அறிவிப்பை வெளியிடுவார்கள். அனுமதியின்றி கட்டடம் கட்டினால் பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்த பின்னரே கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும். இந்த ஆய்வு அஸ்திவாரம் மட்டம் அளவில் மட்டும் நின்றுவிடாது. இந்த ஆய்வுகள் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி உள்ள 200 வார்டுகளிலும் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்த பின், உதவி செயற்பொறியாளர்கள் ஆய்வு அறிக்கையை உதவி செயற்பொறியாளர்களிடம் சமர்பிப்பார்கள். குறைந்தபட்சம் 25% கட்டிடங்கள் உதவி செயற்பொறியாளர்களால் மீண்டும் சோதனை செய்யப்பட்டு 15 மண்டலங்களில் உள்ள செயற்பொறியாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்படும். நிர்வாக பொறியாளர்கள் 5% கட்டிடங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ஆண்டுதோறும் கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட திட்டத்தில் இருந்து விலகி கட்டப்பட்டுள்ல பல கட்டிடங்களும் கடந்த சில நாட்களாக சீல் வைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“