முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய பிரீமியம் பட்ஜெட் ரக Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது பழைய கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும்.
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி
ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வெளியாகி இருக்கும் சாம்சங்கின் Galaxy M53 5G போன், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த போனில் MediaTek டிமென்சிட்டி 900 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், அமோலெட் டிஸ்ப்ளே, 108MP கேமரா போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. பழைய சாம்சங் போனிற்கு, அதன் புதிய மாடலுக்கு சில வித்தியாசங்கள் மட்டுமே உள்ளது.
புதிய புராசஸர், விலைக் குறைப்பு, புதிய இயங்குதளம், பெரிய பின்பக்க கேமரா தவிர அனைத்துமே பழைய எம்53 மாடலில் உள்ளது போல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் iQOO Z5, சியோமி 11i ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
வெறும் 200 ரூபாய்க்கு 14 OTT தளங்கள் – ஜியோ அறிவித்த அதிரடி திட்டம்!
சாம்சங் கேலக்ஸி எம்53 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy M53 5G Specifications)
சாம்சங் Galaxy M53 5G போனில் 6.7″ அங்குல முழுஅளவு HD பிளஸ் AMOLED திரை உள்ளது. மேலும் இதில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் இந்த டிஸ்ப்ளேக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இந்த போனில் 6GB, 8GB என இரண்டு ரேம் தேர்வுகளும் 128GB ஸ்டோரேஜ் மெமரி தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. MediaTek டிமென்சிட்டி 900 5ஜி புராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்53 கேமரா (Samsung Galaxy M53 5G Camera)
செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா முன்பக்க டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதான கேமராவைப் பொருத்தவரை, நான்கு கேமராக்கள் கொண்ட குவாட் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 108MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.
USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.1, வைஃபை, இரட்டை 5ஜி சிம் போன்ற இணைப்பு ஆதரவினையும் சாம்சங் போன் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளாது. அதனை ஊக்குவிக்க 25W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்53 விலை (Samsung Galaxy M53 5G Price)
விலையைப் பொருத்தவரை, இந்தியாவில் இந்த போனின் 6GB + 128GB விலை ரூ.23,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB +128GB வேரியன்டின் விலை ரூ.25,999 ஆக உள்ளது. அமேசான் ஷாப்பிங் தளம், சாம்சங் இந்தியா இணையதளத்தில் ஏப்ரல் 29, 2022 அன்று பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் குறித்து உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்
.
லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!