சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் நடப்பாண்டில் இருந்து உள்நிறுவன சொந்த தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். ஒவ்வொரு வட்டமாக தணிக்கை செய்யப்படும் என்றும் மே 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தணிக்கை செய்யப்படும் என்றும் தணிக்கை செய்யப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட விமுறைகளின் படி பதிவேட்டில் உள்ளபடி சாலை போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.