பல கெட்டப்களில் மிரட்டும் விக்ரம்: தீயாய் பரவும் 'கோப்ரா' மேக்கிங் வீடியோ..!

விக்ரம்
முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘மகான்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில்
அஜய் ஞானமுத்து
இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘
கோப்ரா
‘ பட ரிலீசுக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

‘மகான்’ படத்தை
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ
நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவான இந்தப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஓடிடி ரிலீசாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுது.

‘மகான்’ படத்திற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கிய படம் ’கோப்ரா’. இதன் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் முதல், இரண்டாவது அலை காரணமாக தாமதம் ஆனது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காலங்களில் எல்லாம் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

‘டான்’ படத்தின் தாறுமாறு அப்டேட்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ’கோப்ரா’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதீரா’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் மிரட்டியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள அதீரா பாடலில் விக்ரம் பல கெட்டப்களை போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

‘கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக
ஸ்ரீநிதி ஷெட்டி
நடித்துள்ளார். இந்தப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிகுமார், கனிகா, மிருளாணி ரவி, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கோப்ரா’ படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் 66; டைரக்டர் சொன்ன நல்ல செய்தி; குஷியில் விஜய் ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.