புதுடெல்லி: மத்திய அரசு வழங்கி வரும் உர மானியம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.65 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பீட்டு நிறுவனம் கிரிஸில் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட்டில் உர மானியத்துக்கு என்று ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது மூலப் பொருட்களின் விலையும் சர்வதேச அளவில் உர விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் உர மானியம் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசு உர மானியத்துக்கு என்று ரூ.1.4 லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்கியது. இந்நிலையில், விலைவாசி உயர்வால் மானியத் துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உர மானியத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு குழுவை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.