139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்!

பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து ரூபாய் 139 கோடி பணம் மோசடி செய்தார் என வழக்கு தொடரப்பட்டது. 

இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

ஊழல்

இதைத் தொடர்ந்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சிறையில் இருந்த லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான எதிர் பிரமாணப்பத்திரத்தை சி.பி.ஐ சமர்பிக்க வேண்டும் எனக்கூறி ஏப்ரல் 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை என வழக்கை விசாரித்த நீதிபதி அபரேஷ் குமார் சிங்கிடம், ஊழல் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ ஏப்ரல் 8-ம் தேதி தெரிவித்தது. அதைத் தொடர்ந்து லாலு பிரசாந்த் யாதவின் ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

லாலு பிரசாத்துக்கு !

இந்த தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் யாதவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் செய்தியாளர்களிடம், “இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தனது 5 ஆண்டுகள் சிறை தண்டனையில் 41 மாதங்களை சிறையில் கழித்திருக்கிறார். எனவே, ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எங்களின் மனுவை ஏற்று ஜாமீன் வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு செவ்வாய்க்கிழமைக்குள் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எனவே, ஜாமீன் பத்திரத்தை சமர்ப்பித்து விடுதலை உத்தரவைப் பெறுவோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.