IPL 2022 DC vs RR live score Updates in tamil: 15வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் டெல்லி அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளி பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், அதைப் புறந்தள்ளிவிட்டு, பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பஞ்சாப் அணியை 115 ரன்னில் சுருட்டிய டெல்லி அணியினர், இலக்கை 10.3 ஓவரிலே எட்டிப்பிடித்து அபார வெற்றியை ருசித்தனர். எனவே அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவர். டெல்லி அணியில் தொடக்க ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக தொடக்க வீரர் வார்னர் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். பந்துவீச்சில் குலதீப் சுழல் மாயாஜாலம் செய்து வருகிறார். டெல்லி அணி வென்ற 3 ஆட்டங்களிலும் அவர் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவ்ரை, இதுவரை நடந்த 6 ஆட்டங்களில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் வலுவான ஃபார்மில் உள்ள தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 சதம் உள்பட 375 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தியுள்ளார். அவருடன் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல் போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஆர் அஷ்வின் பலம் சேர்க்கின்றனர்.
குறிப்பாக, சுழல் மன்னன் சாஹல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் உடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். தற்போது ஊதா நிற தொப்பியையும் வசப்படுத்தியுள்ளார். மொத்தத்தில், சமபலம் பொருந்திய அணிகளாக வலம் வரும் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai 22 April 2022
Delhi Capitals
Rajasthan Royals
Match Yet To Begin ( Day – Match 34 ) Match begins at 19:30 IST (14:00 GMT)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ஆர் அஷ்வின், ஓபேட் மெக்காய், ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, கே.சி கரியப்பா, டேரில் மிட்செல்லப்பா, , ஜேம்ஸ் நீஷம், ரஸ்ஸி வான் டெர் டுசென், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுனய் சிங், குல்தீப் சென், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால்.
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, மந்தீப் சிங், ஸ்ரீகர் பாரத், லுங்கி என்கிடி , அஷ்வின் ஹெப்பர், பிரவீன் துபே, அன்ரிச் நார்ட்ஜே, கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சகாரியா, ரிபால் பட்டேல், யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால்
7:30 மணிக்கு தொடங்கும் ஆட்ட்டம்!
15வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
𝐊𝐮𝐥-𝐂𝐡𝐚 𝐑𝐞𝐮𝐧𝐢𝐭𝐞𝐝 💙💗It’s going to be a wrist-spin feast for cricket lovers in #dcvrr tonight 🔥#yehhainayidilli | #ipl2022 | @imkuldeep18 | @yuzi_chahal#tataipl | #ipl | #delhicapitals pic.twitter.com/nSjERx3kgo
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2022
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் டெல்லி – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.