நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும்
விக்னேஷ் சிவன்
இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு
விஜய் சேதுபதி
,
நயன்தாரா
இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு ‘
காத்து வாக்குல ரெண்டு காதல்
‘ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. கண்மணியாக வரும் நயன்தாரா மற்றும் கதிஜாவாக வரும்
சமந்தா
இருவரையும் காதலிக்கும் ரெம்போவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
பல கெட்டப்களில் மிரட்டும் விக்ரம்: தீயாய் பரவும் ‘கோப்ரா’ மேக்கிங் வீடியோ..!
இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் கலர்புல்லான டிரெய்லர் வெளியாகியுள்ளது. கண்மணியா? கதிஜாவா? என ரசிகர்களே குழம்பும் படியாக நயன்தாராவும், சமந்தாவும் அழகில் ஜொலித்துள்ளனர். இருவரிடமும் மாட்டி கொண்டு தவிக்கும் காதல் ரெமோவாக விஜய் சேதுபதி கலக்கியுள்ளார். டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச மனுஷன் என விஜய் சேதுபதியை கலாய்த்து வருகின்றனர்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
“நடிப்பு அரக்கன் விஜய் சேதுபதி” “என்னோட சிங்ககுட்டி யுவன்” ஆர் கே சுரேஷ்!