டோக்கியோ: உக்ரைனின் புச்சா படுகொலைத் தாக்குதலை கண்காணித்த ரஷ்ய வீரர்களை, அந்நாட்டு அதிபர் புதின் கவுரவித்த செய்தியை வாசித்த ஜப்பான் பெண் செய்தி வாசிப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் குறித்த செய்தியை வாசித்துக் கொண்டிருந்த போது, துக்கம் தாங்காமல் ஜப்பான் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அழும் அந்த பெண் பெயர் யுமிகோ மாட்சுவோ என்று தெரிய வந்துள்ளது. மாட்சுவோ, உக்ரைனின் போர் குறித்த செய்தி ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது “புச்சா படுகொலை தாக்குதலை கண்காணித்த ரஷ்ய வீரர்களை கவுரவித்து, சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மூலமாக புதின் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்” என்ற வரியை வாசிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
இன்னும் ஏராளமான மக்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்றபோது… தனது வாசிப்பை நிறுத்தி விட்டு ”என்னை மன்னிக்கவும்… மன்னிக்கவும்” என்று கூறினார். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும், உக்ரைனிய போர் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது என்று செய்திவாசிப்பைத் தொடர்ந்தார்.
இந்த வீடியோவை Reddit வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைப்பார்த்த அதன் பயனர்கள் செய்திவாசிப்பாளரின் துணிச்சலைப் பாராட்டினர். ”இவை அனைத்தும் ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எதிரொலிப்பதை உணர்த்துகிறது. நாம் அனைவரும் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஒருவரையொருவார் பாதுகாக்க விரும்புகிறோம்” என்று பயனர்கள் தெரிவித்துள்ளார். சிலர் செய்திவாசிப்பாளரைப் போல தாங்களும் துக்கத்தில் அழுததாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதானா ரஷ்ய படையெடுப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் புச்சாவும் ஒன்று. மற்றொரு புதிய தாக்குதலுக்காக ரஷ்ய படைகள் அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய பின்னர், உக்ரைனியர்கள் அங்கு பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Japanese TV anchor Yumiko Matsuo breaks down when reading the news of Putin bestowing honours on the brigade that committed atrocities in Bucha. She had just shown clips of children hiding in the bunker of the Mariupol steel mill and was overcome with emotion. pic.twitter.com/xxzB6PfFEP
— Dallas (@59dallas) April 21, 2022