மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை திட்டிய அதிகாரி..!

உத்திரபிரதேசத்தில் மகனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை அரசு அதிகாரி ஒருவர் விரலை நீட்டி திட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

காசியாபாத் மோடிநகர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி பள்ளி பேருந்தில் சென்ற சிறுவனுக்கு குமட்டல் ஏற்பட்டதால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபோது மின் கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஷுபாங்கி  ஷுக்லா, மகன் இறந்த துக்கத்தில் அழுது புலம்பிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து வாயை மூடி அமைதியாக இருக்கும்படி விரலை நீட்டி திட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.