இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் உயர்வு: கேரளாவில் 48 பேர் பலி

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்றும்  கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட  அறிக்கை: இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 2,451 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  புதிதாக 54 பேர் கொரோனாவால் பலியானதை தொடர் ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 116 உயர்ந்துள்ளது. தற்போது 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று பலியான 54 பேரில் 48 பேர் கேரளாவில் மட்டுமே பலியாகி உள்ளனர். டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.புதிய மருந்து கண்டுபிடிப்பு சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்  கொரோனா சிகிச்சைக்கு ‘இண்டோமெத்தாசின்’ என்ற மருந்தை பயன்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில், கொரோனாவை குணப்படுத்துவதில் அந்த  மருந்து சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கொரோனா 1வது அலை மற்றும் 2வது அலையின்போது நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், லேசாகவும், சற்று அதிகமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நல்ல பலனை அளித்தது. எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதை கவனத்தில் கொண்டு கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் வேண்டும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.