ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றார். தொரந்தோ கருவூலத்தில் ரூ.139 கோடியை முறைகேடாக எடுத்ததாக தொடரபட்ட வழக்கில் கடந்த பிப்ரவரியில் சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து அவரது தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 5 ஆண்டு தண்டனையில் அவர் 41 மாதங்களை சிறையில் கழித்து விட்டதாகவும் லாலுவின் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.