என்.ஆர்.ஐ.,களுக்கு ஆன்லைன் ஓட்டு?| Dinamalar

புதுடில்லி-நம் நாட்டில் நடக்கும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில், 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது.

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வசிக்கும் 1.26 கோடி இந்தியர்களில் 60 – 65 சதவீதம் பேர், இந்த தேர்தல்களில் ஓட்டளிக்க தகுதி யுடையோராக உள்ளனர். எனினும், இவர்களில், ஒரு லட்சம் பேர் மட்டுமே, பதிவு செய்து ஓட்டுரிமை பெற்றுஉள்ளனர். இவர்கள், தேர்தலின்போது, இந்தியாவுக்கு வந்து, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், ”வெளிநாடு வாழ் இந்தியர்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக ஓட்டளிக்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்து உள்ளார்.வெளிநாடுவாழ் இந்தியர்கள், தபால் ஓட்டு வாயிலாக ஓட்டளிப்பதற்கு அனுமதி வழங்க, சட்ட திருத்தம் செய்யக்கோரி, மத்திய சட்ட அமைக்கத்திடம் தேர்தல் கமிஷன் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.