சமூகத்தில் மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக கோவை வரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கோவை வரும் ஆளுநருக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை ஊட்டி செல்வதற்காக கோவை விமான நிலையம் வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தமிழக ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.