எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இப்தார் விருந்தில் நிதிஷ்குமார்.. மகா கூட்டணியில் இணைகிறாரா என சர்ச்சை

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்  கலந்துகொண்டார். 

ராப்ரி தேவி இல்லத்தில் 20 நிமிடங்கள் நடைபெற்ற இப்தார் விருந்தில் அவர் பங்கேற்றார். தேஜஸ்வி, அவரது சகோதரர் தேஜ் பிரதாப் மற்றும் மூத்த சகோதரி மிசா பார்தி ஆகியோருடன் அவர் அமர்ந்திருந்தார்.

முதல்வர் நிதிஷ் குமார்  பாஜகவுக்கு எதிரான  மகா கூட்டணிக்கு திரும்புவார் என்ற ஊகங்கள் குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்தார்.

“பாஜக, ஜேடியு எல்ஜேபி என அனைத்து கட்சியினருக்கும் நாங்கள் இப்தார் விருந்துக்கு அழைப்புகளை வழங்கியுள்ளோம், மேலும் அனைவரும் இப்தார் விருந்தில் பங்கேற்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.