சென்னை: உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என முனீஷ்வர்நாத் பண்டாரி கூறினார்.