இந்திய முதலீட்டுச் சந்தையில் இருந்த ஐபிஓ மேஜிக்-ல் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று பெரும் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
இப்படி ஐபிஓ மேஜிக்-ல் தோல்வி அடைந்த முன்னணி நிறுவனம் பேடிஎம், இதேவேளையில் பெரும் சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள முக்கியமான நிறுவனம் நைகா.
சம்பள உயர்வு: ஹெச்சிஎல் கொடுத்த குட்நியூஸ்.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!
நைகா நிறுவனம்
நைகா நிறுவனம் ஏற்கனவே சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது தனது வர்த்தகத்திற்காகப் பல பிரிவுகளில் முதலீடு செய்து அசத்தி வருகிறது. இதன் மூலம் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் நைகாவில் முதலீடு செய்ய இது சரியான தருணமாக விளங்குகிறது.
ஆன்லைன் வர்த்தகக் கட்டமைப்பு
நைகா ஆன்லைன் விற்பனையில் மிகவும் வலிமையாக இருக்கும் நிலையில், வேகமாக டெலிவரி செய்யவும், அதிகளவிலான பொருட்களை வர்த்தகம் செய்யவும் ஆன்லைன் வர்த்தகக் கட்டமைப்பை விரிவாக்கம் செய்தும், மேம்படுத்தியும் வருகிறது.
ரீடைல்
அதைவிட முக்கியமாக ரீடைல் வர்த்தகத்தை வலிமைப்படுத்த நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகள் அனைத்திலும் ரீடைல் விற்பனை கடைகளைச் சிறிதும், பெரிதுமாகத் திறந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களை நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்குத் தனது வர்த்தகக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது.
நேரடி ரீடைல் பிரிவு
நேரடி ரீடைல் பிரிவில் இறங்கியுள்ளதால் அழகு சாதன பொருட்களைத் தாண்டி பிற பொருட்களையும் விற்பனை செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்த பால்குனி நாயர் பல புதிய வர்த்தகத்தில் முதலீடு செய்து விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளார்.
சலூன்
தற்போது ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தைக்குள் வரும் நிலையில் பர்சனல் க்ரூமிங் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த வர்த்தக வாய்ப்பை உணர்ந்த நைகா ESTEE LAUDER ஹேர் கேர் நிறுவனத்துடன் இணைந்து Aveda என்னும் பிராண்டில் சலூன்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.
Aveda சலூன்
முதல் சலூன்-ஐ பெங்களூரில் திறக்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் மும்பை மற்றும் டெல்லியில் Aveda சலூன்களைத் திறக்க உள்ளது. நைகா தனது ரீடைல் வர்த்தக நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி Aveda சலூன்களை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
கிளீன் பியூட்டி
இதேபோல் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பையும் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு உள்ள நைகா கிளீன் பியூட்டி பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இப்பரிவில் முன்னோடியாக இருக்கும் Earth Rhythm என்னும் நிறுவனத்தில் 41.65 கோடி ரூபாய் முதலீடு செய்து 18.51 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
நியூட்ரி காஸ்மெட்டிக்ஸ்
இதைத் தொடர்ந்து டையட்ரி சப்ளிமென்ட் மற்றும் நியூட்ரி காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் இயங்கி வரும் Nudge Wellness நிறுவனத்தில் 3.6 கோடி ரூபாய் முதலீடு செய்து 60 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் பிரிவு வர்த்தகம் ஆன்லைன் வர்த்தகம் மட்டும் அல்லாமல் ரீடைல் ஸ்டோர் வர்த்தகத்திற்கும் பெரிய அளவில் உதவும்.
athleisure நிறுவனம்
தற்போது உலக நாடுகளிலும், இந்தியாவிலும் பிரபலமாகி வரும் athleisure ஆடைகள், அதாவது உடற்பயிற்சி மற்றும் தினமும் பயன்படுத்தும் ஆடைகளைத் தான் athleisure ஆடைகள் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவில் இறங்க முடிவு செய்த நைகா KICA என்னும் நிறுவனத்தை 4.51 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது.
நைகா பங்குகள்
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நைகாவின் தாய் நிறுவனமான FSN ஈகாமர்ஸ் வென்சர்ஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1.27 சதவீதம் அதிகரித்து 1843 ரூபாயாக உள்ளது. 2022ல் 11.66 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Nykaa expanding business in salon, clean beauty, athleisure, neutri-cosmetics
Nykaa expanding business in salon, clean beauty, athleisure, neutri-cosmetics நைகா பங்குகளை வாங்க சரியான நேரம்..?! அடுத்தடுத்து புதிய முதலீடுகள்..!