அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் – திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் – டிடிவி தினகரன்.!

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அடுத்த பழவூர் பகுதியில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் துருபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் தெரசாவுக்கும், ஆறுமுகம் என்ற நபருக்கும் இடையே ப்ளக்ஸ் பேனர் அகற்றுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஆறுமுகம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காவல் ஆய்வாளரை சரமாரியாக குத்தி உள்ளார்.

அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் உடனடியாக செயல்பட்டு, ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன், காவல் உதவி ஆய்வாளரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி.மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருகின்றன. 

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.