புதுடெல்லி,
டெல்லி அருகே காசியாபாத் வேவ் சிட்டியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக்கின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டார். அவர் காரில் மோதி சுழன்றபடி தூக்கிவீசப்பட்டார். அதே நேரத்தில் அவரது பைக் காரால், சில மீட்டர்கள் இழுத்துச்செல்லப்பட்டது.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.