பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் ‘அனிமல்’ (Animal) படத்தின் படப்பிடிப்புத்தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர், அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த பான் இந்தியா படமான ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ (Animal) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஏற்கெனவே ராஷ்மிகா மந்தனா ‘மிஷன் மஜ்னு’ மற்றும் ‘குட்பை’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில், பாலிவுட்டில் இது அவருக்கு மூன்றாவது படமாக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், பரினீதி சோப்ரா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘அர்ஜூன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார்.
ANIMAL Day 1 with #RanbirKapoor #RashmikaMandanna pic.twitter.com/Hu5NyFf8YU
— Lakeer Ka Fakeer (@arthwrites) April 23, 2022
‘அனிமல்’ படத்தை பூஷன் குமார், கிருஷ்ணன் குமாரின் டீ-சீரிஸ், பிரணாய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் முராட் கேட்டணியின் சினி 1 ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், அண்மையில் படப்பிடிப்பு துவங்க இருந்தது. ஆனால், கடந்த 14-ம் தேதி நீண்டநாள் காதலர்களும், திரைநட்சத்திரங்களுமான ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணத்திற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, திருமணமான ஓரிரு நாட்களிலேயே நடிகர் ரன்பீர் கபூர் மணாலியில் நடக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புத்தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கிரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை இங்கே கிளிக்செய்துகாணலாம்