சுகமான உறக்கத்தை தரும் Flipkart கூலிங் டேஸ் AC தள்ளுபடி விற்பனை!

வெயில் காலத்தில் பாதி உறக்கத்தோடு நீங்கள் புலம்பிக் கொண்டு இருப்பது
பிளிப்கார்ட்
காதில் விழுந்துவிட்டது. உங்களுக்காக, அதுவும் இந்த கோடை கால வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் ஏசிக்கள் மீது அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

அந்த வகையில், தற்போது Flipkart Super Cooling Days சலுகை விற்பனைத் தினத்தைத் தொடங்கி உள்ளது. இந்தக் காலத்தில் பல குளிர் சாதனப் மின்னணு பொருள்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கோடைக்கு ஏசி, குளிரூட்டி, மின்விசிறி வாங்க நினைத்தால், இந்த சலுகை தினம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த விற்பனையானது பல்வேறு பிராண்டுகளின் பல குளிரூட்டும் சாதனங்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. Flipkart விற்பனையில் Haier
Split AC
-ஐ பாதி விலையில் வாங்கலாம். இந்த ஏசியில் கிடைக்கும் சலுகைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

அடிக்குற வெயிலுக்கு ஏசி வேணும் தான் – அதுக்காக இதெல்லாம் தெஞ்சுக்காம இருக்கக் கூடாது!

Haier 0.9 Ton 3 Star Split AC

ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி பிளிப்கார்ட் விற்பனையில் மலிவாகக் கிடைக்கிறது. இந்த ஏசியின் அடிப்படை விலை ரூ.50,990. ஆனால், 50% விழுக்காடு தள்ளுபடிக்குப் பிறகு ரூ.24,990 என்ற விலையில் வாங்கலாம். கூடுதலாக, ப்ரீபெய்ட் சலுகையின் கீழ், நீங்கள் ரூ.1000 தள்ளுபடியின் பலனையும் பெறுவீர்கள்.

இதனால் ஏசியின் விலை ரூ.23,990 ஆகக் குறையும். ஹையர் ஏசிக்களுக்கு வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. ஏசி வாங்க எஸ்பிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1,750 வரை தள்ளுபடி கிடைக்கும். அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டால், ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியை ரூ.22,240 என்ற விலையில் வாங்கலாம்.

ஏன் இந்த போன்கள் வெடிக்கிறது? சரியான காரணங்கள் என்ன?

ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியின் அம்சங்கள்

ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி மைக்ரோ ஆன்டி-பாக்டீரியல் ஃபில்டர் மற்றும் சூப்பர் Anti-Corrosion தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஆட்டோ ரீஸ்டார்ட் வசதி மற்றும் ஸ்லீப் மோடும் இந்த ஏசியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
ஸ்பிலிட் ஏசி
54 டிகிரி வெப்பநிலையிலும் குளிர்ந்த காற்றை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த ஏசியின் கண்டன்சர் 100% காப்பர் மெட்டலால் ஆனது. எனவே, இது நீடித்து உழைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. 15 மீட்டர் வரை காற்றை செலுத்தும் சக்தி கொண்ட இந்த ஏசி, சில நிமிடங்களில் அறையை குளிர்விக்கும் திறன் கொண்டது.

ஹையர் 0.9 டன் ஸ்பிளிட் ஏசி 3 நட்சத்திர மதிப்பீட்டில் வருவதால் மின்சாரத்தை சேமிப்பையும் வழங்குகிறது. பிளிப்கார்ட்
சூப்பர் கூலிங் டேஸ்
விற்பனை ஏப்ரல் 25 வரை நடைபெறுகிறது. எனவே, ஏப்ரல் 25ஆம் தேதி வரை இந்த ஏசியை மலிவு விலையில் வாங்க முடியும்.

மேலதிக செய்திகள்:
redmi 10 series: நோக்கியா இடத்திற்கு குறி: நறுக்குணு ரெண்டு பட்ஜெட் போன் – ரெட்மி 10ஏ; 10 பவர் அறிமுகம்!50 inch smart tv: பம்பர் தள்ளுபடி! மலிவு விலையில் சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள்!jio fiber: வெறும் 200 ரூபாய்க்கு 14 OTT தளங்கள் – ஜியோ அறிவித்த அதிரடி திட்டம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.