சில வருடங்களுக்கு முன்பு மேலூர் தம்பதிகளாக
கதிரேசன்
மற்றும் மீனாட்ஷி ஆகியோர் தொடர்ந்து வழக்கு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர்
தனுஷ்
தங்களின் மகன் என அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் தனுஷ் எங்களை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலூர் தம்பதிகளாக கதிரேசன் மற்றும் காமாட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ரஜினி போனால் என்ன நான் இருக்கேன் : தனுஷ்
மேலும் இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று மேலூர் தம்பதிகள் மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த குற்றச்சாட்டிற்கும் போதிய முகாந்திரம் இல்லை என கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சனை தலைதூக்காத நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன் மற்றும்
மீனாட்சி
மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டது என்னவென்றால், தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கதிரேசன்
ஆனால் பல நாட்கள் ஆகியும் அந்த முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே எங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பல நாட்கள் கழித்து இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்
தனுஷ் தற்போது தான் தன் மனைவியை விவாகரத்து செய்து சோகத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் அவருக்கு மேலும் ஒரு பிரச்சனையா என அவரது ரசிகர்கள் வருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விமலென்ன : விஜய்யா? விஜய்சேதுபதியா? – வெளுத்தெடுத்த தயாரிப்பாளர்
.