தனுஷ்
தற்போது ஒரு மெகாஹிட் வெற்றியை எதிர்நோக்கி பல படங்களில் நடித்துவருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் அவரை ஏமாற்ற மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருகிறார் தனுஷ்.
அதைத்தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
கிளாஸான இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி ?எதிர்பாராத கூட்டணி..!
இந்நிலையில் தனுஷ் இயக்குனர்
நெல்சன்
உடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் விஜய்யின்
பீஸ்ட்
படத்தை இயக்கினார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே நெல்சன் அடுத்ததாக ரஜினியை இயக்கவிருக்கும் படத்திற்க்கு சிக்கல் எழுந்துள்ளதாக பல தகவல்கள் வந்தன. பீஸ்ட் படம் சொதப்பியதால்
ரஜினி
நெல்சன் உடன் பணியாற்ற யோசிப்பதாக பேசப்பட்டது.
ஆனால் இதெல்லாம் வெறும் வதந்திதான் என பலர் கூறிவரும் நிலையில் தற்போது நெல்சன் பார்வை தனுஷ் பக்கம் திரும்பியதாக தெரிகின்றது. கூடிய விரைவில் நெல்சன் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்ற உள்ளார்களாம். ஆனால் இப்படம் தலைவர் 169 படம் வெளியானதற்கு பிறகுதான் துவங்கும் என ஒரு தகவல் உலாவருவது குறிப்பிடத்தக்கது.
தளபதி 66; விஜய் போட்ட கண்டிஷன்!