வாஷிங்டன் : ‘நாட்டின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியா, ரஷ்யாவை சார்ந்திருக்கக்கூடாது’ என, அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.ஒப்பந்தம்ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் துவங்கியது முதல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளை துண்டித்து, ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், நாட்டின் ராணுவ உள்கட்டமைப்பை வலுபடுத்த, இந்தியா பல்வேறு ராணுவ தளவாடங்களை, ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது. கடந்த, 2018ல், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, ‘எஸ் – 400’ ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க, ரஷ்யாவுடன், 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, மத்திய அரசு செய்தது.இந்நிலையில், ரஷ்யாவிடம் ராணுவ ஆயுதங்களை வாங்கும் இந்தியா குறித்து, அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான, ‘பென்டகனின்’ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:
இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும் சரி, தங்கள் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய, ரஷ்யாவை சார்ந்து இருக்கக்கூடாது. அதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது.இந்த விவகாரத்தில், நாங்கள் நேர்மையாக கருத்து தெரிவிக்கிறோம். ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை, நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம்.நாங்கள் மதிக்கிறோம்
அதே நேரத்தில், இந்தியா உடனான எங்கள் உறவுகளை, மிகவும் மதிக்கிறோம். இந்த உறவுகளை மேம்படுத்த, தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். அது எங்களுக்கு மிகவும் முக்கியம்.தெற்காசிய பிராந்தியத்தில், பாதுகாப்பான சூழல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தியா தான். அதை நாங்கள் மதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement