பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள் ரம்ஜான் சிந்தனைகள்-22| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உறவினர், நண்பர்கள் யாராவது உதவி கேட்டு வரும் நிலையில் நீங்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் எரிச்சல்படக் கூடாது. உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் பிச்சை கேட்டு நின்றால், ‘வேறு வீட்டுக்குப் போ’ என விரட்டாதீர்கள். ‘இப்போது வாய்ப்பில்லை; பிறகு பார்க்கலாம்’ என பொறுமையுடன் சொல்லுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான்.

latest tamil news

சிலருக்கு தர்மம் செய்ய பணவசதி இருக்காது. இருந்தாலும் உதவுவார்கள். அப்போது அவர்களிடம், ”என்னை பார்த்தாயா! எவ்வளவு பெரிய உதவியை நான் உனக்கு செய்திருக்கிறேன். என்னை போல நல்லவர் யார் இருக்கிறார்கள்? என தற்பெருமை கொள்வார்கள். ‘நான் செய்த இந்த உதவியை மறப்பது கூடாது; எனக்கு எப்போதும் சாதகமாகத் தான் நீ நடக்கணும்’ என்று சிலர் நிர்பந்தம் செய்வார்கள். இப்படி நடப்பது இறைவனுக்கு ஏற்புடையது ஆகாது. பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள்.

latest tamil news

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:28 மணி

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.