ஜம்மு காஷ்மீரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி, 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் பனிஹால் – காசிகுண்ட் இடையே அமைக்கப்பட்ட இருவழி சுரங்கப்பாதையை துவக்கி வைக்கிறார்.
8 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பனிஹால் – காசிகுண்ட் சுரங்கப்பாதையின் மூலம் 16 கிலோ மீட்டர் வீண் பயண அலைச்சலை தவிர்க்க முடியும்.
இரு வழி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் அவசர வெளியேற்றத்திற்கு என ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கும் தனி அவசர வழி அமைக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு, நிலச்சரிவு உள்ளிட்ட இடர்களை தவிர்த்து ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கிடையே சீரான போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.