தனுஷை பிரிந்த பிறகு கெரியரில் பிசியாகி வருகிறார்
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த். ஓ சாத்தி சல் எனும் பாலிவுட் படத்தை இயக்க தயாராகி வருகிறார். மேலும் ஒரு இந்தி படம், ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில் தன் தங்கை சவுந்தர்யாவின் கணவரான
விசாகன்
வணங்காமுடியை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா என தகவல் வெளியாகியுள்ளது.
வஞ்சகர் உலகம் படம் மூலம் நடிகரானவர் விசாகன். மேலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. ஆனால் அவர் படங்களில் நடிக்க விரும்புவது சவுந்தர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.
ஐஸ்வர்யா சொன்னதை கேட்ட சவுந்தர்யாவோ, நீங்கள் படத்தில் நடிக்கக் கூடாது என்று கணவரிடம் சண்டை போட்டாராம். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா, விசாகன் படம் தொடர்பாக அப்பா ரஜினியிடம் புகார் தெரிவித்தார்
சவுந்தர்யா
என பேசப்படுகிறது. ஒரு இயக்குநரான சவுந்தர்யா தன் கணவரை படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்ல மாட்டார்.
மேலும் விசாகனை வைத்து படம் எடுக்கிறேன் என்று ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப முடியாது.
ஓகே மட்டும் சொல்லிடாதீங்க, சோழி முடிஞ்சுடும்: பதறும் தனுஷ் ரசிகர்கள்