இந்தியா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருப்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசிய உள்ளாட்சி அமைப்புகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ‘உள்ளாட்சி அமைப்புகளே இந்திய மக்களாட்சி முறையின் பிரதான தூண்களாக திகழ்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி தினத்தை ஒட்டி காஷ்மீரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: எல்லை தாண்டி தாக்க இந்தியா தயங்காது – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM