சின்னத்திரையில் ரசிகர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார்கள். இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. சன் டிவிக்கு சொந்தமாக பல சேனல்கள் இருக்கின்றன.
ஸ்டார் விஜய் குரூப்புக்கு தமிழில் தற்போது விஜய், விஜய் மியூசிக் ஆகிய சேனல்கள் இருக்கின்றன. இந்நிலையில் “விஜய் டக்கர்” என அந்த சேனலுக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
இருப்பினும் இது முழுவதும் புது சேனலா, அல்லது விஜய் மியூசிக் சேனலை rebrand செய்து இப்படி மாற்றுகிறார்களா என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.