"`மைராண்டி' அப்படினு டைட்டில் வச்சது பிரச்னை ஆச்சு!"- Vaisaag – உடன் ஒரு நேர்காணல்

நம் பலரின் அன்றாடங்களில் இரண்டறக் கலந்துநிற்கிறது இசை. மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், மன அமைதி பல நிலைகளுக்கு நம்மை இசை இட்டுச் செல்லும். திரைப்பட இசையின் அபிரிவிதமான வளர்ச்சியே இதற்கு உதாரணம். திரையிசையைத் தாண்டி பல வாத்திய கலைஞர்களும், தனியிசைக் கலைஞர்களும் தங்கள் ஆளுமையை நிரூபித்துவருகின்றனர். சமீபத்தில் பல தனியிசைக் கலைஞர்கள் தங்களுக்கென ரிப்பீட்டட் ஆடியன்ஸைக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஸ்பாட்டிபையில் கலக்கி வருபவர்தான் வைசாக். அவருடன் உரையாடியதிலிருந்து…

மியூசிக் ஃபீல்டுல எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது?

Vaisaag

“12 -ம் வகுப்பு படிக்கும்போது சென்னை சார்ந்த படங்கள் பார்த்து சென்னை மேல ஆர்வம் வந்தது. அப்போதான் மியூசிக் மேலையும் விருப்பம் இருந்தது. நான் மியூசிக் டைரக்டர் ஆக போறேன்னு சொன்னேன். மொத்த கிளாசும் திரும்பி பார்த்துச்சு. அப்போ ஒரு ஸ்பார்க் வந்தது மியூசிக் டைரக்டர் ஆகனும்னு. சென்னை வந்து விஸ்காம் தேர்தெடுத்து படிச்சேன். அங்க இருந்து முயற்சி பண்ணி பாடல்கள் பாடி, நானாவே சொந்தமா கம்போஸ் பண்ணி பில்ட் அப் (build up) ஆகி வந்ததுதான் மியூசிக் மேலான என் காதல்.”

உங்களுக்குப் பிடிச்ச மியூசிக் டைரக்டர் யாரு?

Vaisaag

“அந்த நேரத்துல எனக்கு அப்படி யாரும் இல்ல. டிவி-ல எல்லா மியூஸிக் டைரக்டரோட பாடல்களும் ஓடும். அது எல்லாமே எனக்குப் பிடிச்சிருந்தது. அதுக்கு அப்புறம்தான் இளையாரஜா சார், ரஹ்மான் சார் இசையில இருந்து நிறைய கத்துகிட்டேன். அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் இன்ஸ்பையர் ஆகிருக்கேன்”

நீங்க எந்த வருஷம் மியூசிக் பண்ண ஆரம்பிச்சிங்க?

2016 -ம் ஆண்டு தான் நான் தனியா ( independent) மியூசிக் பண்ணத் தொடங்குனேன். அப்போது, நான் சென்னைக்கு வந்த நேரம். சென்னை வந்த அனுபவத்தை வச்சு நான் முதல் பாடல் பண்ணினேன்,அந்த பாடல் பேரு ‘மதராசி’ தி ஆன்த்தம் ஆஃப் சென்னை னு பண்ணினேன். அந்த பாடல் யூடியூப் ல இருக்கு. அதுக்கப்புறம் அப்படியே தொடர்ந்து பாடல்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

உங்களுடைய பாடல்கள்ல அதிகமா மிக்சிங் இல்ல. ஆனால் அது எல்லோருக்கும் பிடிச்சுருக்கு அந்த மேஜிக் எப்படி நடக்குது?

Vaisaag

“நான் முன்னாடி பண்ணின பாடல்கள்ல அதிகமா மிக்ஸ் பண்ணியிருக்கமாட்டேன். இப்போ வெளிவர பாடல்களுக்கு என்னுடைய நண்பர் யோகேஷ் மிக்ஸ் பண்ணாரு. புரொபஷெனல்லா (professional) ஆக பண்ணினா ஜாம் ஆகி மனநிலை கெடும். அதுனால ஃப்ரண்ட்ஸ் ஆக பண்ணோம். பிரசர்(pressure) இல்லாம பண்ணோம். வாய்ஸ் கேக்கனும். மியூசிக் பின்னாடி வரனும். எல்லா இடத்துலையும் கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கணும். இதைதான் நான் ஒரு ஐடியாவாகச் சொன்னேன். என்னுடைய ‘மைராண்டி’ ஆல்பத்துக்கு நான் பாடல் எழுதி

கம்போஸ் பண்ணினேன். ‘என் ராண்ட் அ கொஞ்சம் கேளு’ பாடலுக்கு பாடல் வரிகள் என்னுடைய நண்பர் ஸ்ரீ காந்த் எழுதினாரு.என்னுடய கஷ்டமான நேரங்கள்ல என்னோட என் நண்பர்கள் இருந்தாங்க. முக்கியமா ராக்கில்,ஷிபு,ரகவீன்,மணிகண்டன் ரவி,அஷ்வா,விஷ்வா எல்லோருக்கும் நான் நன்றி சொல்றேன்.”

உங்க பாடல்ல மைராண்டி அப்படிங்கிற வார்த்தையை வச்சுருக்கீங்க. அதை லேபிள்ல வெளியிடுற யாராவது பின் வாங்கியிருக்காங்களா?

வைசாக்

“தொடகத்துல மைராண்டின்னு சொல்ற அப்போ யாரும் பின் வாங்கல.அதுக்கு மாற்றாக வேறு பெயர் வைக்கச் சொன்னாங்க. இப்போ வரைக்கும் அது ஒரு டாப்பிக்கா தான் இருக்கு. எல்லோருக்கும் பாடல் ரொம்ப பிடிச்சுருச்சு. மைராண்டி அப்படிங்கிற வார்த்தை பாட்டுல ஒரு வரியாக ஆகிடுச்சு, அதை தலைப்பாக வைக்கும் போது கொஞ்சம் பிரச்னை இருந்தது. அடுதடுத்து பாடல்கள் பன்ணும்போது, அதை ஒரு பாடமாக எடுத்துகிட்டேன். அது ஒரு பிரச்சனையாக யாரும் இதுவரை கொடுக்கல.”

உங்க பாடலுக்கு பல கமென்ட்ஸ் வரும். அதையெல்லாம் எப்படி பாக்குறீங்க?

சைவசாக்

“கமென்டஸ் எல்லாம் அவங்க எமோஷன் சார்ந்து இருக்கிறதுதான். என்னுடைய ராண்ட் பாடல் லாக்டவுனுக்கு அப்புறம் தான் பலருக்கு கனெக்ட் பண்ண முடியுது ,அதுக்கு முன்னாடி அவங்க ஒரு மனநிலைல இருந்துருப்பங்க. லாக்டவுன்னுக்கு பிறகு சிலர் இந்த பாட்டு நல்லா இருக்குனு கேக்குறாங்க. நெகடிவ் கமென்ட்ஸ் எனக்கு கம்மிதான். இந்த மாதிரி பாடல் பண்ணுங்கனுதான் சொல்லுவாங்க. இது இல்லாம வேற மாதிரி முயற்சி பன்னுங்கனுதான் சொல்லுவாங்க. இந்தப் பாட்டு எனக்குப பிடிக்கல அப்படிங்கிற இடத்துலயிருந்து யாரும் இதுவரை கமென்ட் பண்ணல”

படங்கள்ல எதுவும் வேலை பாக்குறீங்களா?

“படங்கள்னு வாய்ப்பு எதுவும் வரல. மியூசிக் லேபிள்கூட தான் இப்போ சேர்ந்து வேலை பார்துட்டு இருக்கேன்.ஒரு பாடல் வச்சு ஒரு படதுக்கு கம்போஸ் பண்ணிட முடியும்னு நினைக்கக்கூடாது. பொறுமையா கத்துகிட்டு பண்ணனும். இப்போவரைக்கும் ஒரு படம் பார்த்தா ஆடியன்ஸ் ஆகத்தான் பாக்குறேன். ஒரு கம்போசராக இருந்து படங்கள் பாக்குறது ரொம்ப குறைவுதான்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.