Annamalai and Murugan welcomes Amit shah with these books: திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மொழிப்பெயர்ப்பை வழங்கி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இதனையடுத்து அவர் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பின்போது அமித் ஷாவுக்கு திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மொழிப்பெயர்ப்புகள் அவரிடம் வழங்கப்பட்டன.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ”ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நம் தமிழ் மண்ணிற்கு வருகை தந்த மாண்புமிகு திரு அமித் ஷா அவர்களை இன்று அன்புடன் வரவேற்றோம். நம் திருக்குறளையும் (குஜராத்தியில்), தமிழ் இலக்கிய மறை பழமையான (2300 ஆண்டுகள்) தொல்காப்பியத்தை (இந்தியிலும்) அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்”, என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அரை வேக்காட்டுத் தனமாக பேசுகிறார் அண்ணாமலை: செந்தில் பாலாஜி தாக்கு
இதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மாண்புமிகு.மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜி அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்று, வாழ்வின் வழிமுறையை வகுத்துக் காட்டும் வண்ணம், வள்ளுவ பெருந்தகை இயற்றிய திருக்குறள் புத்தகத்தை வழங்கி வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமித் ஷா புதுச்சேரிக்கு பெங்களூரு மார்க்கமாக செல்வதாக முடிவாகி இருந்தது. இந்தநிலையில், திடீரென பயணத்திட்டம் மாற்றப்பட்டு அவர் சென்னை வழியாக புதுச்சேரி சென்றுள்ளார்.